search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை உயர்நீதிமன்றம்"

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜெயலில் உள்ளார்.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தில் நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.

    அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு 2022ம் ஆண்டு அக்டோபரில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
    • விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இந்த வழக்கில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு மனுதாரர் தடை விதிக்க வேண்டும் எனவும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

    அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு என அண்ணாமலை பேச்சு.
    • சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என்று குறிப்பிட்டிருந்தார்.

    அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

    • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
    • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

    மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.
    • கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:-

    * ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை.

    * அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.

    * கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    • ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
    • ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.

    சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.

    நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.

    மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 

    வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

    மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

    அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.

    • முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும்.
    • புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு.

    கலாசேத்ரா பாலியல் தொல்லை புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலாசேத்ரா அறக்கட்டளையின் நடன ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் தானாக இழந்துள்ளார்.

    பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக விட்டது.

    அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொள்ள உள்ளது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி அந்த உத்தரவின் நகல் சட்டசபை செயலகத்துக்கும் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப்பட்டு விடும். அந்த விவரங்கள் கிடைத்ததும் சட்டசபை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    இது குறித்து சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளதால் தீர்ப்பு வழங்கிய ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் சட்டசபை செயலகம் பணியை தொடங்கும்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் விரைந்து செயல்படுத்தி விடுவோம். இதில் காலதாமதம் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

    எனவே அடுத்த வாரம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துரு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலக் கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பொன்முடி அப்பீல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இப்போது சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. பதவி இழந்துவிட்டார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய் விடுகிறது. சட்டசபைக்கும் செல்ல முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.

    இந்த விஷயத்தில் 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது. பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அப்பீல் செய்து அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்.

    அந்த வகையில் 3 ஆண்டு தண்டனை அனுபவித்தால் அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகமொத்தம் 9 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க இயலாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×